ஹைதராபாத்: தேர்தல் வரும் மாநிலங்களில் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒடுக்க "ஈடி"யை (அமலாக்கப் பிரிவு) அனுப்பி விடுகிறது பாஜக.. இதுதான் அவர்கள் கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தும் நடைமுறை.. ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா.
டெல்லி சுங்கவரி திட்ட மோசடி வழக்கில் கவிதாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு வருமாறு டெல்லி அமலாக்கப் பிரிவு கவிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தான் ஆஜராகவிருப்பதாக கவிதா தெரிவித்துள்ளார்.
அமலாக்கப் பிரிவு சம்மன் குறித்து அவர் கூறுகையில், இந்த சம்மனைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவு, சிபிஐ போன்றவற்றைப் பயன்படுத்துவதுதான் பாஜகவின் ஸ்டைல்.
அதிலும் தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களில் அங்குள்ள பலமான கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவை ஏவி விடுகிறது பாஜக. பிரச்சாரத்திற்கு மோடி வருவதற்கு முன்பாகவே அந்த மாநிலங்களுக்கு ஈடி வந்து விடுகிறது. தனது சித்தாந்தத்திற்கு ஒத்துவராத அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஒடுக்க ஈடியைத்தான் பயன்படுத்துகிறது பாஜக என்று குற்றம் சாட்டினார் அவர்.
கவிதா தற்போது எம்எல்சியாக உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் - டிசம்பர் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதலும் நிலவுகிறது. அவ்வப்போது இரு கட்சியினருக்கும் இடையே அடிதடிகளும் நடைபெறுகிறது. டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் பலர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குகளும் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில்தான் கவிதா ரூபத்தில் கே.சி.ஆருக்கு செக் வைக்கப்படவுள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}