இன்ஸ்டாகிராமை கலக்கி வரும்.. புரூனே இளவரசருக்கு கல்யாணம் ஆயிருச்சு.. மனைவி யார் தெரியுமா!

Jan 12, 2024,07:30 PM IST
பந்தர் சேரி பெகவன்: புரூனே நாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. உலகிலேயே மிகப் பெரிய பணக்கார இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் இளவசரர் அப்துல் மதீன், ஆசியாவிலேயே மிகவும் தகுதிவாய்ந்த பேச்சலராக செல்லமாக அழைக்கப்பட்டவர். காரணம், பார்ட்டி அந்த அளவுக்கு ஜாலியான மனிதர். அவருக்கு இப்ப கல்யாணமாயிருச்சுங்க!

புரூனே நாட்டு மக்களுக்குத்தான் அவர் இளவரசர். ஆனால் இன்ஸ்டாகிராமிலேயே குடியிருப்பவர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்டா பிரபலம். காரணம், நிஜ வாழ்க்கையில் ராஜாவாகிறாரோ இல்லையோ, இன்ஸ்டாகிராமில் ராஜாதி ராஜாவாக வலம் வருபவர் மதீன்.

ஹாலிவுட் ஸ்டார்களே தோற்றுப் போகும் அளவுக்கு கலக்கலாக வலம் வருபவர் மதீன். அதி நவீன ஜெட் பிளைட்டுகளை ஓட்டுவது, ஸ்பீட் போட்டுகளில் பறப்பது, வெறும் மார்புடன் சல்மான் கான் ரேஞ்சுக்கு போஸ் கொடுப்பது என்று அசத்திக் கொண்டிருப்பவர் மதீன். அவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் கூட உண்டு.



]மதீனுக்கு 32 வயதாகிறது. இவர் சுல்தான் ஹசன்சால் போல்கியாவின் 4வது மகன் ஆவார். ராஜாவுக்கு மொத்தம் 10 பிள்ளைகள், அதில் மதீன்தான் கடைசி. இவருக்கு பட்டத்து இளவரசராகும் வாய்ப்புகள் குறைவு. அதாவது இவர் மன்னராகும் வாய்ப்பு கிட்டத்தட்ட அறவே இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் நிஜத்தில் இப்போது இவர்தான் ஒரு ராஜா போல வாழ்ந்து வருகிறார்.

இவருக்கும் 29 வயது பெண்ணுக்கும் கோலாகலமாக கல்யாணம் நடந்துள்ளது. மணப்பெண் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் கிடையாது. மாறாக சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஆவார். இந்த திருமணத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ராஜ குடும்பத்திலிருந்து வந்தவராக இருந்தாலும் கூட படு ஜாலியானவர் மதீன். சிக்ஸ் பேக் உடல்வாகு கொண்டவர். சாகச விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி போட்டோஷூட், வீடியோஷூட் நடத்துபவர். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருப்பவர்.  புரூனே ராஜகுடும்பத்துக்கு இவர்தான் வெளியுலகில் முகவரியாகவும் இருக்கிறார். அந்த அளவுக்கு பாப்புலரானவரும் கூட.



மதீனின் மனைவி பெயர் யாங் மூலியா அனிஷா ரோஸ்னா.  இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி இன்ஸ்டாகிராம் உலகையே கலக்கி வருகிறது. புரூனே நாடானது மிகவும் பழமைவாதத்தை பின்பற்றும் ஒரு நாடு. இப்போதுதான் அது புதுமைகள் பக்கம் திரும்பி வருகிறது. அதிலும் கூட மதீன் அதிக அளவில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதன் மூலம் அந்த நாட்டின் இளைய தலைமுறையும் மாறி வருகிறது. புரூனே நாட்டு இளைஞர்களுக்கு மதீன் மீது அதிக பாசம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மதீனுக்கு புருனே நாட்டில் பலரும் வைத்துள்ள செல்லப் பெயர்.. ஜேம்ஸ் பாண்ட் 007 என்பதாம். காரணம் அவர் கொடுத்துள்ள போஸ்கள் அப்படி!

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்