சென்னை: தவெக கட்சிக் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஆரம்பித்தார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று கூறினார். அதன்பின்னர் கட்சியின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் விஜய். உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக செய்து வந்தார் விஜய்.

இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியினை இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய், தந்தை உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கட்சி கொடியில் மேலும் கீழும் சிவப்பும் நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது. இந்த கொடியில் இரண்டு யானைகளுக்கு நடுவில் பச்சை நிறத்தில் 23 நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களுக்கு அனைத்தும் ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலரும் அமையப்பெற்றுள்ளது.
விஜய் என்றால் வெற்றி. அதேபோல் வாகை என்றாலும் வெற்றி. எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது உறுதி என்பதைக் குறிக்கவே இக்கட்சி கொடியின் நடுவில் வாகை பூ இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டும் வந்தது. விஜய் வெளியிட்ட கட்சிக் கொடி மற்றும் பாடலுக்கு அனைத்து தரப்பினர் ஆதவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்ட கட்சிக் கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதிகளின் படி தவறானது எனவும், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியனர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, யானைச் சின்னமானது கேரள அரசின் இலச்சினையைக் குறிப்பது போல உள்ளதாகவும், பெவிக்கால் விளம்பரத்தில் வருவது போல உள்ளதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துப் பேசி வருகின்றனர். யானைச் சின்னம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபனை தெரிவித்திருப்பதால் கொடி டிசைன் மாறுமா அல்லது இதை சட்டப்படி விஜய் சந்திப்பாரா என்று தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}