சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லக்னோவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் மாயாவதி. பெரம்பூரில் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாயாவதி அவரது தலையில் கையை வைத்து ஆறுதல் சொன்னார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.

பின்னர் மாயாவதி பேசும்போது, ஆம்ஸ்ட்ராங் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வளருவதற்கு கடுமையாக பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.
தமிழ்நாடு அரசுக்கு எனது கோரிக்கை என்னவென்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள். குறிப்பாக முதல்வவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முதல்வர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர் சுதந்திரமாக நடமாடத் தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அரசு சீரியஸாக இருந்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். இப்போதும் கூட குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. அவர்களாக வந்துதான் சரணடைந்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றார் மாயாவதி.
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி
SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
நகர்ப்புற போக்குவரத்தில் சாதனை.. 2 விருதுகளை அள்ளியது சென்னை மெட்ரோ நிறுவனம்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!
தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!
{{comments.comment}}