டில்லி : மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கி உள்ளது. இன்று பிற்பகலில் 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜனவரி 31) துவங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 10ம் தேதி துவங்கி ஏப்ரல் 4 ம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி உள்ளது. ஜனாதிபதி உரையை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய உள்ளார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 01ம் தேதியான நாளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் எட்டாவது மத்திய பட்ஜெட் ஆகும். பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இது தொடர்பாி பல எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு துறையிலும் இருந்தாலும் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்பது தான் உச்சபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளை பட்ஜெட் தாக்கலுடன் அவை ஒத்திவைக்கப்படும். அதற்கு பிறகு பிப்ரவரி 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான விவாதமும். ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கு பிறகு மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறும். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதா உள்ளிட்ட மொத்தம் 16 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்ட தொடரில் வங்கி சட்டங்களில் திருத்தம் செய்வது, ரயில்வே சட்டங்களில் திருத்தம் செய்வது, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் மாற்றம் செய்வது, எண்ணெய் துறையில் ஒழுங்குளை மற்றும் வளர்ச்சியை கொண்டு வருவது உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}