சென்னை: சேலம், அம்மன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. அப்போது பேசிய கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெகவில் எந்தப் பதவியும் நிரந்தரமானது அல்ல. இங்கு உழைப்புக்கு மட்டுமே கெளரவம் கிடைக்கும் என்றார்.
நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டு அரசியல் பயிலரங்கள் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு பற்றிய அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

அதன்படி, இன்று சேலம், அம்மன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. மாநாட்டு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்து வருகிறது. தவெகவில் பதவி நிரந்தரமானது அல்ல. எதிர்பார்க்காமல் உழைப்பவர்களுக்கு தவெகவில் அங்கீகாரம் கிடைக்கும்.அப்பா அம்மா கால்ல மட்டும் தான் நீங்க விழணும்... இனி வரும் காலங்களில் வேற யாரோட காலிலும் நீங்க விழக்கூடாது.
நம்மளுடைய உயிர் மூச்சு எல்லாம் நம்முடைய தளபதி தான். நம்மளுக்கு அரசியல் தெரியுமானு தான் எல்லாரும் கேக்குறாங்க. நம்மல பாத்து தான் மத்தவங்க அரசியலை கத்துக்கனும். அப்படி தான் நம்முடைய தளபதி வளர்ந்துள்ளார். மத்தவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி கூட்டம் கூட்டனும்னா 2 மாசம் ஆகும். நமக்கு அப்படி இல்ல. நமக்கு தலைவன் ஒரு பேர சொன்னாலே போதும். நம்முடைய உயிர், மூச்சு எல்லாமே தளபதி தான் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}