ஆளுநர் குறித்து என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால்.. மமதா பானர்ஜிக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்!

Jul 27, 2024,08:39 AM IST

கொல்கத்தா:  மேற்கு வங்காள மாநில ஆளுநர் சிவி ஆனந்தபோஸ் குறித்து முதல்வர் மமதா பானர்ஜி என்ன வகையான விமர்சனம் வைக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதேசமயம், பேச்சு சுதந்திரத்தின் நெறிமுறைகளை எந்த வகையிலும் மீறாமல் விமர்சிக்க வேண்டும் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம், முதல்வர் மமதா பானர்ஜிக்கு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கடந்த சில வருடங்களாக அதிக அளவிலான மோதல்கள் அரங்கேறியுள்ளன. 3 மாநிலங்களும், ஆளுநர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகளையும் தொடர்ந்துள்ளன.


இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக அவதூறாகவோ அல்லது முறையற்ற வகையிலான பேசவும், அறிக்கை விடவும் கூடாது என்று கூறி கல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். ஆகஸ்ட் 14ம் தேதி வரை இந்த தடையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மமதா பானர்ஜி சார்பிலும், திரினமூல் காங்கிரஸ் தலைவர் குனாஷ் கோஷ் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.




இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஸ்வரூப் செளத்ரி மற்றும் ஐ.பி. முகர்ஜி ஆகியோர் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் ஆளுநர் குறித்துப் பேசக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவில் சில மாற்றங்களை பெஞ்ச் செய்துள்ளது. அதன்படி, ஆளுநர் குறித்து தாராளமாக முதல்வர் பேசலாம். ஆனால் அது பேச்சு சுதந்திரத்தின் நெறிகளை மீறாமல் இருக்க வேண்டும். பொதுப் பதவியில் இருப்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப பேச வேண்டும் என்று மமதாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு புறம்பாக முதல்வர் பேசினால் அதற்குரிய விளைவுகளையும் அவர் சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


நீதிபதிகள் மேலும் கூறுகையில் பேச்சு சுதந்திரம் நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் உண்டு. அதேசமயம், ஒருவரது பேச்சால் இன்னொருவரின் சுய மரியாதை கெடும் பட்சத்தில் தனது சுயமரியாதையைக் காத்துக் கொள்ளத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அவருக்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்தை யாரும் முழுமையாக தடுக்க முடியாது. அதில் கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாட்டுடன் கூடிய விமர்சனங்களில் தவறில்லை.


எனவே ஒருவர் குறித்துப் பேசும்போது அவரை எழுத்துப் பூர்வமாகவோ, வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ அவமதிக்காத வகையில் பேச வேண்டும், கருத்துக்களைக் கூற வேண்டும், விமர்சிக்க வேண்டும்.


மக்களுக்கு உண்மைகளை அறிய உரிமை உண்டு. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு விஷயத்தை அவர்களுக்குச் சொல்ல  வேண்டும் என்றால் அதைத் தாராளமாக சொல்லலாம். அதேசமயம், அதைச் சொல்லும்போது மரியாதைக் குறைவாக அதை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்