கொல்கத்தா: பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற பெஞ்ச், பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை எழுப்பியுள்ளன.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு இளைஞர் அப்பீல் மனு செய்திருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு அது. அந்த மனுவை நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஸ், பார்த்தா சாரதி சென் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.
விசாரணையின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில அறிவுரைகளை நீதிபதிகள் கூறினர். அவர்கள் கூறியதாவது:
இளம் வயதில் செக்ஸ் உறவுகள் தொடர்பாக எழும் சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க பள்ளிகளில் செக்ஸ் கல்வியை விரிவாக நடத்த வேண்டும்.
வளர் இளம் வயதில் செக்ஸ் என்பது இயல்பானதுதான். ஆனால் செக்ஸ் உணர்வுகள் எழுவதை கட்டுப்படுத்த வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் நடந்து கொள்வதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.
பெண்கள் தங்களது செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்திற்காக அதை கட்டுப்படுத்தாமல் இருக்கக் கூடாது. சமூகத்தின் பார்வையில் பெண்களைத்தான் குறை சொல்வார்கள். இதைத் தவிர்க்க, அந்த இரண்டு நிமிடத்தில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை மனதில் கொண்டு உங்களை இழந்து விடக் கூடாது.
தங்களது உடம்பையும், கண்ணியத்தையும், சுய மதிப்பையும் பெண்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதன் மீதான உரிமையை விட்டுக் கொடுத்து விடக் கூடாது.
பெண்களின் கண்ணியத்தை ஆண்கள் மதிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தங்களது மனங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் சுய மதிப்பு, அவரது உடல் மீதான உரிமை, தனிப்பட்ட அந்தரங்கம் ஆகியவற்றை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் கருத்துக்கள் தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}