சென்னை: தமிழக போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், யாரும் போராட்டத்தில் ஈடுபடாமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜனவரி 9ம் தேதி முதல் போராட்டம் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு பேருந்து சேவை பாதிப்பு ஏற்படும் என்பதால் போக்குவரத்து ஊழியர்கள் யாரும் லீவு எடுக்கக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த வித விடுப்புகளையும் எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்று போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து இருந்த நிலையில் போக்குவரத்துத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற் சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து கழக தொழில் சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று நடந்த 2வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}