டெல்லி: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்காவில் போய், இந்தியாவை அணு ஆயுதம் கொண்டு அழிப்போம், உலகத்தையே அழிப்போம் என்று மிரட்டியுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொறுப்பில்லாத பேச்சு என்று இந்தியா கடுமையா சாடியுள்ளது.
சரி ஆசிம் முனீர் மிரட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும்.. உண்மையில், பாகிஸ்தானிடம் உலகையே அழிக்கும் அளவுக்கு அணு ஆயுதங்கள் இருக்கிறதா?
SIPRI (Stockholm International Peace Research Institute) என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் எண்ணிக்கை மாறவில்லை. விமானம், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் அணு ஆயுதங்களைத் தாக்கும் திறனை பாகிஸ்தான் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. வரும் காலத்தில் மேலும் பல அணு ஆயுதங்களை பாகிஸ்தான் உருவாக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை ஷாகீன்-3. இதன் தாக்குதல் எல்லை 2,750 கிலோமீட்டர். இது இந்தியாவிலுள்ள எல்லா இடங்களையும் தாக்கும் திறன் கொண்டது.
பாகிஸ்தான், அபாபீல் என்ற ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது. இது ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இதனால், இந்தியாவிலுள்ள ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளால் இதைத் தடுப்பது கடினம். இருப்பினும், இந்தியாவிடம் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, இத்தகைய ஏவுகணைகளைத் தடுக்கக்கூடியது.
பாகிஸ்தானின் ஏவுகணைகள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவைத் தாக்கும் அளவுக்குத்தான் சக்தி கொண்டவை. மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளை எல்லாம் இவற்றால் தாக்க முடியாது. எனவே, பாதி உலகத்தையே அழிப்போம் என்று அசிம் முனீர் பேசியது வெறும் வாய்ச் சவடாலாகத்தான் பார்க்க முடியும்.
ஷாகீன்-3 தவிர, பாகிஸ்தானிடம் ஃபாடா-II, ஷாகீன்-II, கௌரி-II போன்ற பல ஏவுகணைகளும் உள்ளன. இதில் சிறிய வகை ஏவுகணைகளும் உண்டு. இந்த எல்லா ஏவுகணைகளும், அணு ஆயுதங்களையோ அல்லது சாதாரண குண்டுகளையோ தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை.
பாகிஸ்தான், ரா'ஆட் என்ற விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது. ஆனால், இது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பாகிஸ்தானின் மிராஜ் III மற்றும் மிராஜ் V ரக விமானங்கள் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடியவை. எதிர்காலத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் JF-17 ரக விமானங்களும் இந்தத் திறனைப் பெறும் என்று SIPRI அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தான், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாபர்-3 என்ற ஏவுகணையையும் உருவாக்கியுள்ளது. இது இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை. இது செயல்பாட்டுக்கு வந்தால், விமானம், நிலம், கடல் என மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் திறனை பாகிஸ்தான் பெற்றிருக்கும்.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட, அவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது தெரியவில்லை. 1998-ல் பாகிஸ்தான் நடத்திய சோதனையில், அதன் அதிகபட்ச சக்தி 12 கிலோடன்கள் எனத் தெரியவந்தது. இதைவிட சக்தி வாய்ந்த ஆயுதங்களை பாகிஸ்தான் உருவாக்கியிருக்கலாம். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களையும் அவற்றை ஏவும் கருவிகளையும் தனித்தனியாகவே வைத்திருக்கிறது என்றும் SIPRI அறிக்கை கூறுகிறது
பாகிஸ்தானிடம் இவ்வளவு அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட அதை முழுமையாக முறியடிக்கக் கூடி வகையில் இந்தியாவும் தனது அணு ஆயுத பலத்தை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}