வாடிகன் சிட்டி: போப்பாண்டவராக இருப்பவர் மறைந்து விட்டால் புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக வழிகாட்டியாக போற்றப்படும் போப்பாண்டவர் பதவியில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் காலமாகி விட்டார். இதையடுத்து புதிய போப்பாண்டவர் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. இந்தத் தேர்தல் "கன்கிளேவ்" (Conclave) என்று அழைக்கப்படுகிறது. புதிய போப்பாண்டவரை கர்டினால்கள்தான் தேர்வு செய்கிறார்கள். அதாவது அவர்களிலிருந்து ஒருவர்தான் புதிய போப்பாண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
கர்டினால்களின் கூட்டம்:
போப்பின் மறைவுக்குப் பிறகு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்டினால்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடுகின்றனர். 80 வயதிற்குட்பட்ட கர்டினால்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.
கர்டினால்கள், சிஸ்டைன் சிற்றாலயத்தில், வெளி உலகத் தொடர்புகள் ஏதுமின்றி, ரகசியமாக வாக்களிக்கிறார்கள். ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும் வரை, ஒவ்வொரு நாளும் நான்கு முறை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கவனம் ஈர்க்கும் புகைக் கூண்டு
வாக்கெடுப்புக்குப் பிறகு, வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படுகின்றன. இதுதான் முக்கியமானது. வெள்ளை புகை வந்தால், புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று பொருள். கருப்பு புகை வந்தால், வாக்கெடுப்பு தோல்வியடைந்தது என்று பொருள். எனவே புதிய போப்பாண்டவர் தேர்வை அறிய அனைவரின் கவனமும் இந்த புகைக் கூண்டு மீதுதான் இருக்கும்.
புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மூத்த கர்டினால் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் இருந்து "ஹபேமஸ் பாபம்" என்று லத்தீன் மொழியில் அறிவிப்பார். அதாவது "நமக்கு ஒரு போப் வந்து விட்டார்" என்று பொருள். அதன் பின் புதிய போப், பால்கனியில் தோன்றி கூடியிருக்கும் மக்களுக்கு ஆசி வழங்குவார்.
இந்தத் தேர்தல் மிகவும் ரகசியமானது மற்றும் புனிதமானதாக கடைப்பிடிக்கப்படுகிறது. கர்டினால்களின் தனிப்பட்ட விருப்பங்களும், திருச்சபையின் எதிர்காலத்தைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டங்களும் இந்தத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருச்சபையின் உலகளாவிய நிலை மற்றும் அதன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கர்டினால்கள் வாக்களிப்பார்கள்.
திருச்சபையின் பழமையான மரபுகளை பின்பற்றி இந்த தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் கத்தோலிக்க திருச்சபையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும், மேலும் இது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}