சென்னை: அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினார் என தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் அதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதை மீறுவோர் மீது வழக்குகள் பாய்ந்து வருகின்றன.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் நட்சத்திர வேட்பாளரான ஜெயவர்தனை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக பறக்கும் படையினருக்கு புகார்கள் வந்தன. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் மீது தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}