ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

Jun 12, 2026,05:17 PM IST

சென்னை: தமிழகத்தில் குறுவை சாகுபடி காலம் தொடங்கிவிட்ட நிலையில், காவிரி நீர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு, தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


வைரலாகும் விமர்சனம் :


தமிழகத்தில் 'குறுவை சிறப்புத் தொகுப்பு' திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிராகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன."ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, பாசனத்திற்குத் தண்ணீருக்கே வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சி முதலமைச்சர்..." என்ற கடுமையான தமிழக அரசையும், முதல்வர் விஜய்யையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 'முதலமைச்சர் காவிரி நீரைக் கொண்டு வருவாரா? இல்லை தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?' என்ற காரசாரமான கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார்.


கர்நாடகாவுக்கு திமுக கடும் கண்டனம்:




மறுபுறம், தமிழகத்திற்குத் தரவேண்டிய உரியத் தண்ணீரைத் தராமல் ஏமாற்றி வரும் கர்நாடக அரசுக்கு எதிராக திமுக தனது கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை வலியுறுத்தியும் தமிழகத்திற்கான 19 டிஎம்சி (TMC) தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை வழங்கவில்லை. உச்ச நீதிமன்ற மற்றும் நடுவர் மன்ற உத்தரவுகளை மதிக்காமல், தமிழகத்திற்குரிய தண்ணீரைத் திறந்து விடாத கர்நாடக அரசின் இந்த பிடிவாதப் போக்கிற்குத் திமுக தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


விவசாயிகள் கவலை :

குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தர தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே டெல்டா பகுதி விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. வெறும் நிவாரணத் தொகுப்புகளையும் திட்டங்களையும் அறிவிப்பதால் மட்டும் பயிர்களைக் காப்பாற்ற முடியாது என்றும், தங்களுக்குத் தேவையானது முறையான பாசன நீர் மட்டுமே என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்திற்கு வர வேண்டிய 19 டிஎம்சி தண்ணீரைப் பெற அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்