லேப்டாப், கம்யூட்டர்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் ?

Aug 04, 2023,04:04 PM IST
டெல்லி : லேப்டாப், கம்யூட்டர், ஆல் இன் ஒன் பர்சனல் கம்யூட்டர், அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர், சர்வர்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் சீனா மற்றும் கொரியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. ஏதாவது ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் லேப்டாப், கம்ப்யூட்டர் விற்பனை செய்ய வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். 



வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏழு பிரிவுகளின் கீழ்  HSN code 8471 கொண்ட எலக்ட்ரானிக் கேட்ஜட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. Harmonised System of Nomenclature (HSN) code என்பது டேட்டா சேமிப்பு மிஷின்களை குறிப்பதாகும். டேட்டா சேகரிக்கும் கருவிகளை மட்டும் வெளிநாட்டில் இருந்து இ��க்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட லேப்டாப், டேப்ளட் உள்ளிட்டவைகளுக்கு விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலக்கு அளிக்கப்பட்ட கருவிகளை இறக்குமதி செய்வதாக இருந்தால் போஸ்ட் அல்லது கூரியர் மூலம் மட்டுமே பெற வேண்டும். அவற்றிற்கு இறக்குமதி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படும். டேட்டாக்களை பாதுகாப்பதற்காகவும், இந்த கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் உள்நாட்டு ஐடி நிறுவனங்கள் லேப்டாப், கம்யூட்டர், டேப்லட் ஆகியவற்றை வெளிநாட்டு தரத்திற்கு இணையாக உற்பத்தி செய்ய துவங்குவதற்கு முன் இந்த பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்