டெல்லி: கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவிலும் விரிசல் விழுந்துள்ளது. இந்தியத் தூதரக அதிகாரியை கனடா அரசு வெளியேற்றி உத்தரவிட்டது. அதற்குப் பதிலடியாக கனடா தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீருக்குச் செல்வதை கனடா நாட்டவர்கள் தவிர்க்குமாறு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்தது. இதற்குப் பதிலடியாக தற்போது இந்தியாவும் ஒரு அட்வைசரியை பிறப்பித்துள்ளது. அதன்படி கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பபடுகிறது. அரசியல் ரீதியிலான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியர்களுக்கு எதிரான செயல்கள் அதிகரித்து வருவதால், அங்குள்ள இந்திய மக்கள், அங்கு சுற்றுலா செல்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் இந்தியத் தூதர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தியாவுக்கு எதிரான போக்குடன் செயல்படும் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவான போக்கும் காணப்படுகிறது. எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
இந்தியர்களின் நலன் குறித்து கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும், டொரன்டோ, வான்கூவரில் உள்ள துணைத் தூதரகங்களில் இந்திய மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். எதிர்பாராத, அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிட்டால் உதவி செய்ய இது தோதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}