டெல்லி: இன்டர்போல் போலீஸ் அமைப்பு போன்று புதிய பாரத் போல் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
1923 ஆம் ஆண்டு சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் இன்டர்போல் அமைப்பு. அதாவது கடுமையான குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தப்பித்து தங்கி இருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவர்கள், சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கியவர்கள் போன்றோர் குறித்து, விசாரணை மேற்கொள்வதற்காக, கைது செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்த இன்டர்போல்.

இன்டர்போல் மூலம் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குற்றவாளிகள் குறித்து சுற்றறிக்கைகள் அனுப்பப்படும். குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள் அலர்ட்கள் வெளியிடப்படும். இன்டர்போல் அமைப்பில் 184 உலக நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வமைப்பானது பல்வேறு நாடுகளின் காவல்துறைக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் லியான் நகரில் உள்ளது. இதுதவிர சிங்கப்பூர் மற்றும் பியூனஸ் அயர்ஸ் நகரங்களிலும் இதன் அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் இன்டர்போல் போல பாரத் போல் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் குறித்து பாரத் போல் மூலமாக, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளவும், குற்றவாளிகளை பிடிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்புதான் பாரத் போல்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதை அறிமுகப்படுத்தினார். ஆன்லைன் மோசடி, பண மோசடி , போதைபொருள் கடத்தல், மனித உறுப்புகள் கடத்தல், விலங்குகள் கடத்துதல், பெண்கள் சம்பந்தமான வழக்குகள் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேவைப்படும் உதவிகளையும் ஒத்துழைப்பையும் பெற்று விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகளை முடிக்க பாரத் போல் தளம் அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!
Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
{{comments.comment}}