பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்.. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

Jan 30, 2025,08:35 PM IST

டெல்லி: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.


2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை அதாவது ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் இரண்டாவது அமர்வு மார்ச் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 4 தேதி வரை நடைபெற உள்ளது. 


இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், யூஜிசி வரைவுக் கொள்கை, வக்பு வாரிய திருத்த சட்டம், உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்