ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தலாம். ஆனால் அது தொடர்பான இறுதி முடிவை மத்திய தேர்தல் ஆணையமும், மாநில தலைமைத் தேர்தல் அலுவலகமும்தான் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தத் தகவலை அது சுப்ரீம் கோர்ட்டில் இன்று தெரிவித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு ஆஜராகி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்தத் தகவலை தெரிவித்தார். மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீருக்குத் தேர்தல் நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும். அடுத்து நகராட்சித் தேர்தல். அதைத் தொடர்ந்து கடைசியாக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. முன்னதாக மாநிலப் பிரிவினை குறித்து சுப்ரீம் கோர்ட் நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தது. இதனால் நீண்ட கால பலன் இல்லை என்றும் அது கூறியிருந்தது.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் வாதிடுகையில், மாநிலப் பிரிவினைக்கான அவசியம் இருந்ததால்தான் அது செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்ப வேண்டியது அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் திணறி வருவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது தேர்தல் குறித்து தெரிவித்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது கொடுக்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்க மறுத்து விட்டது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}