Petrol - Diesel: கூடுதல் கலால் வரியை அதிரடியாக குறைத்தது மத்திய அரசு!

Mar 27, 2026,05:11 PM IST

- பாவை.பு


டெல்லி:  மேற்காசியா நாடுகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியைக் குறைத்துள்ளது. இதனால்  பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது.


ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக உலகளவில் 95 நாடுகளில் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. 

இதன் காரணமாக பல நாடுகள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி உள்ளது. 


அதிகபட்சமாக, கம்போடியவில் 50 சதவீதமும்  நைஜீரியாவில் 35 சதவீதமும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவும் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக விலையை உயர்த்தி உள்ளது. பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளும் 55 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. 




ஆனால் இந்தியாவில் போர் தொடங்கப்பட்ட பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல் டீசல் விலை உயராமல் அதே விலையிலேயே நீடிக்கிறது.  உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது நாடுகள் தங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது என்பது இயற்கையானது.. ஆனால் மத்திய அரசு அதை பொருட்படுத்தாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனக்கு வர வேண்டிய கூடுதல் கலால் வரியை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. 


இன்று காலை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை தலா 10 ரூபாய் குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளது.. அதாவது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 13 லிருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது , டீசல்  மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.     


மத்திய அரசுக்கு செல்ல வேண்டிய கூடுதல் கலால் வரியில் இருந்து தான் குறிக்கப்பட்டிருக்கிறது.. மாநில அரசுகளும் தங்களின் கலால் வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும். இருப்பினும் தேர்தல் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் இது மேற்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்