டெல்லி: நாடு கடத்ததப்பட்ட இந்தியர்களை, கை விலங்கிட்டு அழைத்து வந்த அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் மத்திய அரசு விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. அதேசமயம், சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டதாக அமெரிக்க தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் இன்று போராட்டத்தை ஏற்படுத்தியதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதாக 104 இந்தியர்களை முதல் கட்டமாக அமெரிக்க அரசு ராணுவ விமானத்தில் ஏற்றி நேற்று இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இந்த இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிட்டு ஏதோ அடிமைகளை அழைத்து வருவது போல விமானத்தில் அமெரிக்கா கொண்டு வந்தது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியர்களையும் இது கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதால் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியை, சந்தித்துப் பேசியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். கைவிலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் இதுகுறித்துக் கூறுகையில், இதற்கு முன்பும் கூட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்தமுறைதான் இவ்வளவு மோசமாக நடந்துள்ளது அமெரிக்க அரசு. இது மிக மிக அநாகரீகமானது. நமது மக்களுக்கு கைவிலங்கிட்டு அழைத்து வந்தது மிகப் பெரிய அவமானம் என்று காட்டமாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13ம் தேதி வாஷிங்டன் செல்லவுள்ளார். அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த நிலையில் இப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}