டெல்லி: மத்திய அரசு வக்பு வாரிய சட்ட மசோதாவை நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யவுள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதால் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் முழுமையாக இதை எதிர்த்துப் பேசவும், வாக்களிக்கவும் முடிவு செய்துள்ளன.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை முதலில் லோக்சபாவிலும், பின்னர் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யவுள்ளது. நாளை பிற்பகல் லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து விவாதமும், இறுதியில் வாக்கெடுப்பும் நடைபெறும்.
மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் விவாதத்தில் முழுஅளவில் கலந்து கொண்டு கடுமையான முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், வாக்கெடுப்பின்போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆர்எஸ்பி தலைவுர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், விவாதத்தில் முழு அளவில் பங்கேற்போம். கடுமையாக எதிர்பபோம். வாக்கெடுப்பிலும் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை சரியான முறையில் நிர்வகிக்க இந்த மசோதாவை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது வக்பு வாரியங்களின் உரிமையைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
லோக்சபாவிலும் அடுத்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதால் தனது கட்சி எம்.பிக்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவை காங்கிரஸ் கட்சி பிறப்பித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
{{comments.comment}}