சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது தான் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சமீப நாட்களாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து ஆறுதல் அளித்து வருகிறது.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஜூன் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் ஜூன் 05ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலார்ட் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மழை நிலவரம் குறித்து தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று மழையை எதிர்நோக்கலாம். பெங்களூரில் நல்ல மழை காத்திருக்கிறது. காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}