விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!

Jan 22, 2026,11:33 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாசு வருடம் 20 26 ஜனவரி 22ஆம் தேதி வியாழக்கிழமை, தை மாதம் எட்டாம் தேதியான  இன்று விநாயகப் பெருமானை வழிபட்டு தடைகள் நீங்கி வெற்றி பெற அனுஷ்டிக்கப்படும் சதுர்த்தி விரதம். இன்று வரும் சதுர்த்தி" வர சதுர்த்தி" என்று அழைக்கப்படுகிறது. எதிலும் வெற்றி பெற முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடுவது சிறப்பு.


சதுர்த்தி விரதம் என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தி திதிகளில் விநாயகர் பெருமானை விரதமிருந்து வழிபடும் நாளாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி ஆகும். வடமொழியில் 'சதுர்' என்பது நான்கு என்பதை குறிக்கும். ஒவ்வொரு 15 நாளைக்கு ஒருமுறை சந்திரனின் சுழற்சியால் சதுர்த்தி திதி வருகிறது.


இந்த விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் நீங்கி செல்வம்,ஆரோக்கியம், ஞானம் பெருக உதவும் குறிப்பாக தேய்பிறை சதுர்த்தி யில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் - துன்பங்களை அழிக்கும் விரதம் ஆக "சங்கடஹர சதுர்த்தி "என அழைக்கப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பவர்கள் நீர்,உணவு உட்கொள்ளாமல் விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டு சந்திரன் உதயமாகும் பொழுது,பூஜை செய்து, விநாயகப் பெருமானுக்கு படைத்த நைவேத்தியத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.


விரத முறைகள்:




சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அதிகாலை நீராடி நாள் முழுவதும் விநாயகரை மனதில் நினைத்து, பால் பழங்கள் உண்டு அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப எளிய உணவுகளை உட்கொண்டு உபவாசம் இருப்பது சிறப்பு.


அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலை,எருக்கம் பூமாலை வாங்கிச் செல்வது சிறப்பு. அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது முக்கியம்.


மேலும் நைவேத்தியமாக விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, பழங்கள், அவ ல், பொரி,  சர்க்கரை பொங்கல், சுண்டல்,  லட்டு போன்ற இனிப்பு பிரசாதங்களை படையல் செய்வது சிறப்பு. இரவு சந்திரனை பார்த்து வணங்கிய பின் இந்த விரதத்தை முடிப்பது சிறப்பு. 


சதுர்த்தி விரதம் இருப்பதனால் ஏற்படும் பலன்கள்:


விநாயகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, மகிழ்ச்சியும்,செழிப்பும், மன அமைதியும், ஆரோக்கியமும், குடும்ப ஒற்றுமை மேலோங்க ஒரு புனிதமான வழிபாடாக கருதப்படுகிறது.


தைஅமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி "சுக்ல பட்ச சதுர்த்தி " என்றும் இன்று அமைந்துள்ள சதுர்த்தி "வரச்சதுர்த்தி "என்றும் அனுஷ்டிக்கப்படுகிறது. வாழ்வில் எவ்வித கஷ்டங்களும், துன்பங்களும் போக்கக்கூடிய சக்தி இந்த சதுர்த்தி விரதத்திற்கு உண்டு.


சதுர்த்தி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?..


சதுர்த்தி விரதத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக திருமண தடை உள்ளவர்கள்,குழந்தை வரம் வேண்டுபவர்கள்,நல்ல படிப்பு, வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள், பண பிரச்சனை உள்ளவர்கள்,நாகதோஷம், கேது தோஷம் உள்ளவர்கள் இந்த சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

 

எளிய பூஜை முறை:


சதுர்த்தி விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வேலைக்கு செல்பவர்கள்,  மாலையில் விநாயகர் படத்திற்கு முன்பு விளக்கேற்றி மலர்கள், அருகம்புல், சூட்டி தங்களால் இயன்ற நைவேத்தியத்தை படைத்து,விநாயகர் பெருமானுக்குரிய மந்திரங்கள் படித்து, தீப தூப ஆராதனை செய்து பூஜை செய்யலாம்.

 

சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா?..


சதுர்த்தி திதியில் சுப காரியங்கள் செய்ய ஏற்ற நாள் அல்ல. ஏனெனில், சதுர்த்தி திதி விநாயகர் மற்றும் எமதர்மனுக்கு உரிய திதி ஆகும்.இந்த நாள் திருமணம், புதுமனை புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல.முற்காலத்தில் மன்னர்கள் போர் துவங்குவதற்கு, எதிரிகளை வெல்வதற்கு இந்த நாளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.


மேலும் தொழிலில் தடை இருப்பவர்கள்,கிரக தோஷங்கள் விலக சதுர்த்தி விரதம் கடைபிடிப்பது சிறப்பு. இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்