சென்னை: புத்தக ஆர்வலர்கள், ஆவலோடு காத்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ம் தேதி தொடங்கவுள்ளதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. புத்தகப் பிரியர்களுக்கான திருவிழாவாக இது ஆண்டுதோளும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் டிசம்பர் 27ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12ம் தேதி வரை இது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

48வது சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளதாக பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
வேலை நாட்களில் தினசரி பிற்பகல் 2 மணி முதல் இரவு எட்டரை மணி வரையில் கண்காட்சி திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு எட்டரை மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். 17 நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அனைத்துப் புத்தகங்களுக்கும், அனைத்து அரங்குகளிலும் 10 சதவீத தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
அனைத்து வகை நூல்களும் கிடைக்கும் வகையில் விரிவான முறையில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இது அனைத்துப் புத்தகப் பிரியர்களுக்கும் பலன் தரும் வகையில் இருக்கும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2000 சதுர அடியில் ஒரு அரங்கு அமைக்கிறது. அதேபோல இந்து சமய அறநிலையத்துறையும் தனி அரங்கு அமைத்து தனது பதிப்பு நூல்களை காட்சிக்கு வைக்கவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}