சென்னை: அயோத்திக்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருவதற்கு வசதியாக அங்குள்ள ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்கவுள்ளது.

புதிய அறிவிப்பின்படி சென்னை, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, தர்பங்கா, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்த விமான சேவைகள் தொடங்கவுள்ளன. தனியார் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த நகரங்களிலிருந்து அயோத்திக்கு விமான சேவையை நடத்தவுள்ளது.
இந்த விமான சேவையை பிப்ரவரி 1ம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை - அயோத்தி நேரடி விமானமானது தினசரி பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு, மாலை 3.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும். அயோத்தியிலிருந்து சென்னை வரும் விமானம் மாலை 4 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}