சென்னை : சென்னை-காட்பாடி இடையே புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இனி சென்னையில் இருந்து புறநகர் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு மின்சார ரயிலில் கூட்டத்தில் இடித்துக் கொண்டு செல்லுவதில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து, காட்பாடி வரை செல்லும் வந்தே பாரத் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 180 கி.மீ., வரை முழு வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் பெட்டிகள் புறநகர் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை-காட்பாடி மட்டுமல்ல, சென்னை-திருப்பதி இடையேவும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 180 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இயக்க தெற்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மெட்ரோ ரயில்களில் உள்ளது போல் தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட வசதிகளும், சொகுசு வசதிகளும் உள்ளடக்கியதாக இந்த வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இனி சென்னை மக்கள் சொகுசாக மட்டுமல்ல, மிக குறுகிய காலத்திலேயே ஆந்திரா வரை ஈஸியாக சென்று வர முடியும்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}