அபார்ட்மென்ட் நாய், பூனைகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வளர்க்க கட்டுப்பாடு கிடையாது.. சென்னை கோர்ட் அதிரடி

Jan 06, 2025,12:45 PM IST

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு அபராதம் விதிப்பது, அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது செல்லாது. அது சட்டவிரோதம் என சென்னை நகர சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி கனவை நினைவாக்க  பலர் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி குடியேறுகின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க பலரும் விருப்பம் காட்ட காரணம் முதலில் பாதுகாப்புதான்.  சிசிடிவி கண்காணிப்பு, பார்வையாளர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் போன்ற அம்சங்களுடன், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைய பெற்றுள்ளது.




குழந்தைகளுக்கான விளையாட்டு வசதி, விளையாட்டு திடல், வாகன நிறுத்தம், உள்ளிட்ட வசதிகளுடன் குழந்தைகள் அக்கம் பக்கத்தினருடன் பாதுகாப்பாக பழகவும் வாய்ப்புள்ளதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளை பலரும் விரும்புகின்றனர். வயதானவர்களுக்கும் இது பாதுகாப்பு என்பதால் கூடுதல் விருப்பமாக மாறியுள்ளது.


ஆனால் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி வருவோருக்கு பல்வேறுவிதமான நடைமுறைச் சிக்கல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், தலை சுற்ற வைப்பதாக உள்ளது. அந்த அளவுக்கு தாறுமாறாக விதிமுறைகளை வகுத்து வீடு வாங்கி வருவோரை அயர வைத்து வருகின்றன இந்த சங்கங்கள். அந்த வரிசையில் சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செல்லப் பிராணிகளை வளர்க்க அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


அதாவது வளர்ப்பு நாயை லிப்டில் ஏற்றி செல்லக்கூடாது. பொது இடத்தில் இயற்கை உபாதைகள் கழித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் சிறுநீர் கழித்தால் ரூபாய் 750 வரை அபராத விதிக்கப்படும் என பல்வேறு நிபதனைகள் வழங்கப்பட்டுள்ளது.  இதனால் கடுப்பான, அந்த குடியிருப்பில் வசித்து வரும் 74 வயதான மனோரமா என்ற மூதாட்டி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்போர் நல சங்கம் செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு அபராத விதிப்பது அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதம் என என்று கூறி, செல்ல பிராணிகளுக்கு அபராதம் விதித்து நிறைவேற்றப்பட்ட  கட்டுப்பாடுகள் செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்