சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இது சென்னைவாசிகளுக்கானது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு குறித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இத்தகைய தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும். தேர்வில் எந்த எந்த வகையான கேள்விகள் கேட்கப்படும். அதற்கு எவ்வாறு தயாராவது உள்ளிட்டவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்த தகுதியான மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை நேரடியாக எடுத்து வந்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மொத்தமாக 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் தனதனி கல்வி தகுதி உள்ளது. எனினும் பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உயர்நிலை மேல்நிலைப் படிப்புகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க போகிறவர்கள். இந்த தேர்வுகள் குறித்து நன்கு புரிந்து கொள்ள அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் குரூப் தேர்வுகள் பற்றி பயிற்சி வகுப்புகளை அரசே நடத்துகிறது. கிண்டியில் இதற்கான பயிற்சிகள் நாளை முதல் தொடங்குகிறது .இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப் 2 ஏவிற்கு 1820 பணியிடங்களும் என மொத்தமாக 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏவிற்கான முதல் நிலைத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையில் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டி உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
வலி!
மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
{{comments.comment}}