சென்னை: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி சில குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளார். அது குறித்து தீர விசாரிக்க வேண்டும். அவருடைய ஜாதி குறித்து விசாரித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது சீரியஸானது. தீர விசாரித்து உண்மை வெளி வர வேண்டும் என்று நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான வினோதினி வைத்தியநாதன் கோரியுள்ளார்.
லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வந்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்து விட்டதாக மாதவி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பேசு பொருளாகவும் மாறியது. இந்த நிலையில் இதுகுறித்து வினோதினி ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெண் தபேதார் மாதவி அவர்களை மேயர் பிரியா அவர்கள் (உதவியாளர் மூலம்) தான் அணியும் லிப்ஸ்டிக் நிறத்தில் அவரும் அணியக்கூடாது என்பதுபோல் எச்சரித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை மாதவி வைத்திருக்கிறார். அவர் பேட்டி கொடுத்ததற்குப்பிறகு இது பேசுபொருளாகி, கூடிய விரைவில் இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து உண்மை வெளிவரும் என்று நம்புவோம்.

அதே சமயம், மாதவி அவர்கள் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
1. மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒரு ஆண் உதவியாளர் கடந்த ஒரு மாதமாக இவரிடம் “நீங்க என்ன ஜாதி?” என்று கேட்டு குடைச்சல் கொடுத்திருக்கிறார் என்று. இவர் சொல்லாததால் இவருடைய சர்வீஸ் ரெக்கார்டுகளையும் எடுத்துப் பார்த்திருக்கிறாராம். பணியிடத்தில் ஒருவர் இன்னொருவரிடம் எதற்கு ஜாதியைக் கேட்கவேண்டும்? இவர் பட்டியலினப்பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இது சட்டத்திற்கு புறம்பானது. அப்படியில்லையெனில், ஜாதியை வைத்து இவரின் பணி நிமித்தங்கள் அமையுமெனில் அதுவும் சட்டத்திற்கு புறம்பானது. இது தீர விசாரிக்கப்படவேண்டும். இவரிடம் ஜாதியைக் கேட்டவர் யார் கேட்கச்சொன்னவர் யார் என்று கண்டறிய வேண்டும். சமத்துவ சமூகம் அமைக்க இது போன்ற பிசிறுகள் அரசு நிர்வாகத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.
2. பெண்கள் தினத்தன்று இந்த மாதவி அலுவலகத்தில் நடத்தப்பட்ட fashion showவில் கலந்துகொண்டு கைதட்டல் வாங்கியிருந்தாராம். இவருக்கு வயது 50ஆகக் கூறப்படுகிறது. மாநகராட்சியில் இத்தனைக்காலம் வேலை செய்ததால் இவர் அங்குள்ளவருக்கு பெருமளவில் பரிச்சயமானவராகத்தான் இருப்பார். பெண்கள் தினத்தில் பெண்களைக் கொண்டாடும் வகையில் பல அலுவலகங்களில் அவர்களுக்குத் தெரிந்த வகையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதில் கலந்துகொண்டது தவறு என்றும் இவருக்கு எச்சரிக்கை விடப்பட்டதாகக் கூறுகிறார்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், எந்த விதத்தில் இது நியாயம்? கற்காலத்திலா நாம் வாழ்கிறோம்? பெண் சுதந்திரத்திற்கு அல்லது பெண் ஊழியருடைய பேச்சு மற்றும் ஆற்றல் சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பது என்று ஆகாதா? லிப்ஸ்டிக் விஷயத்தைவிட மிகவும் கூர்ந்து ஆராயவேண்டிய விஷயங்கள் இவை. மேற்கூறிய மாதவி இப்பொழுது மணலிக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்று காணொலியில் சொல்கிறார். இவருக்கு மட்டுமல்ல, அங்குள்ள பலருக்கு இப்படி தொல்லைகள் இருப்பதாகவும் சொல்கிறார். விசாரணை நடத்தி, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆரோக்கியமான ஆக்கப்புர்வமான பணிச்சூழலை உருவாக்கித்தர மாநகராட்சி கமிஷனர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி இந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த முதலாவதாக அமைக்கப்பட்ட மாநகராட்சி. இதற்கு மாண்புமிகு முதலமைச்சரே 1996-2002 வரை மேயராக பதவி வகித்து சிறந்த பணியாற்றியிருக்கிறார். இன்றும் நமது மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து மழை வெள்ளம் வெயில் என்றும் பாராமல் சிறந்த வகையில் பணியாற்றுகின்றனர். இதில் முதல் பெண் தபேதார் என்பது வரலாற்று சிறப்புமிக்க பதவி. தபேதார் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சியாக வரும் ஒரு பதவி. ஆர்மியின் சார்ஜண்ட் போல் இதுவும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆனால் ஆணையிடப்படாத பதவி. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தவாலியைப்பார்த்து பெருமிதம் கொண்டோம். இப்படிப் பெண்கள் அரசு பதவிகளுக்கு வரும்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்பான ஆக்கப்பூர்வமான பணிச்சூழலை உருவாக்குவதென்ற பெரும் பொறுப்பு அரசு நிர்வாகத்திற்கு இருக்கிறது.
தீர விசாரியுங்கள். உண்மை வெளி வரட்டும் என்று வினோதினி கோரிக்கை வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}