சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக ஜிம் கூடங்கள், பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கு மாநகராட்சி சார்பில் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு அப்படி ஜிம் இல்லை. இந்தக் குறையைப் போக்க EmpowHER என்ற பெயரில் ஜிம்களை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஜிம்மை கோடம்பாக்கம் சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ரூ. 35 லட்சம் செலவில் இந்த ஜிம் உருவாக்கப்பட்டது. கவுன்சிலர் வார்டு நல நிதியிலிருந்து இது உருவாக்கப்பட்டது. இதுதான் சென்னையில் அமைந்த பெண்களுக்கான முதல் மாநகராட்சி ஜிம் என் பெருமை கொண்டது.
தற்போது இதுபோன்ற ஜிம்களை அனைத்து வார்டுகளுக்கும் விரிவாக்கம் செய்கிறது மாநகராட்சி நிர்வாகம். அதன்படி சென்னை மாநகராட்சியில் தற்போது உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கான ஜிம் உருவாக்கப்படுகிறது. அனைத்து ஜிம்களும் வார்டு நல நிதியிலிருந்து அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த ஜிம்களில் தனியார் ஜிம்களில் உள்ளது போலவே அனைத்து நவீன உடற்பயிற்சிக் கருவிகளும் இடம்பெறும்.
இந்த ஜிம்கள் அனைத்தும் அமைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி ஒன்றில் அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்களைக் கொண்ட மாநகராட்சி என்ற பெயர் சென்னைக்குக் கிடைக்கும்.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}