மாடுகளே ஜாக்கிரதை.. கூண்டு வண்டிகளுடன் களத்தில் குதித்தது சென்னை மாநகராட்சி

Aug 13, 2023,01:31 PM IST
சென்னை: சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி களத்தில் குதித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் சமீபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை மாடு ஒன்று முட்டித் தள்ளியது. சிறிது நேரம் அந்த சிறுமியை விடாமல் மாடு முட்டித் தூக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சிறுமிக்கு ஆபத்து ஏற்படவில்லை.




இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது. பள்ளிக்கூடத்திற்குப் போய் விட்டு பத்திரமாக பிள்ளைகள் திரும்பி வருவதற்குள் எப்படியெல்லாம் சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்று பலரும் குமுறினர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  அதிகாரிகளுடன், சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்குச்  சென்று பார்த்து நலம் விசாரித்தார். சிறுமிக்கு கிப்ட்டும், டெய்ரிமில்க் சாக்லேட்டும் கொடுத்து பரிவுடன் பேசி விட்டு வந்தார்.




தற்போது சென்னை மாநகராட்சி தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.  கூண்டு வண்டிகளுடன் மாடு பிடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் 71 மாடுகளை ஊழியர்கள் பிடித்துள்ளனர். திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், கோயம்பேடு, தண்டையார்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த மாடு வேட்டை நடந்து வருகிறது. தொடர்ந்து இந்த  நடவடிக்கை நடைபெறும்.

பசு மாடுகள், கன்றுகளுடன் பிடிக்கப்பட்டால் இரண்டையும் சேர்த்தே முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அவை பிரிக்கப்பட மாட்டாது. அதேபோல கர்ப்பமாக இருக்கும் பசுக்களுக்கும் உரிய கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளையும், கன்றுகளையும் கொட்டடியில் வைத்தே வளர்க்க வேண்டும் என்றும்,  தெருக்களில் உலவ விடக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்