சென்னை: பொதுப் பணியில் ஈடுபட்டிருப்போர் பலரும் சொல்லும் பொதுவான வார்த்தை "எனக்கு நேரமே கிடைப்பதில்லை" என்பதுதான். ஆனால் அதை முறியடித்து தனது பொதுப் பணிகள் போக, ஏழைப் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி Spoken English ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் சென்னயைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் சர்பஜெயதாஸ் நரேந்திரன்.
சென்னை மாநகராட்சியின் 44வது வார்டு கவுன்சிலர்தான் சர்பஜெயதாஸ் நரேந்திரன். இவர் பொதுப் பணிக்கு வருவதற்கு முன்பு ஆசிரியையாக இருந்தவர். ஆங்கில ஆசிரியையான இவர் தற்போது மீண்டும் ஆசிரியை அவதாரம் பூண்டுள்ளார். ஆனால் முழு நேர ஆசிரியையாக அல்லாமல், வாரந்தோறும் ஏழைப் பிள்ளைகளுக்காக ஸ்போக்கன் ஆங்கிலம் சொல்லித் தரும் சேவையை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக இதைச் செய்து வருகிறாராம் சர்பஜெயதாஸ் நரேந்திரன்.
மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் பல குழந்தைகளுக்கு "ஸ்போக்கன் இங்கிலீஸ்" என்பது பெரும் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது. இந்தக் குறையை உணர்ந்த சர்பஜெயதாஸ் நரேந்திரன், வாரந்தோறும் வார இறுதி நாட்களில் இத்தகைய பள்ளிப் பிள்ளைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
அவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது எந்த அளவுக்கு எளிமையானது என்பதை அழகாக சொல்லிக் கொடுக்கிறார். அவர்களை ஆங்கிலத்தில் உரையாட வைக்கிறார்.. எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லித் தருகிறார். கூச்சத்தைப் போக்கி இயல்பான முறையில் ஆங்கிலம் பேசுவது எப்படி என்பதை புரிய வைக்கிறார். இவர் சொல்லித் தரும் முறையாலும், இவரது எளிமையான போதனையாலும் இவரது வகுப்புக்கு வரும் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதற்கு இடையூறாக உள்ள தயக்கம், கூச்சம் நீங்கி சரளமாக பேசி வருகின்றனராம்.
சனிக்கிழமைகளில் தனக்கு மாநகராட்சிக் கூட்டம் உள்ளிட்ட வேலைகள் இல்லாமல் இருப்பதால் அந்த நாட்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆங்கில உரையாடல் வகுப்பை தான் நடத்துவதாக கவுன்சிலர் சர்பஜெயதாஸ் நரேந்திரன் கூறுகிறார்.
பொதுமக்களுக்கான பணியிலும் இவர் குறை வைப்பதில்லை. வார்டு தொடர்பான பிரச்சினைகளை மாநகராட்சிக் கூட்டங்களில் தவறாமல் எழுப்புகிறார். மக்களிடம் தொடர்ந்து சந்திப்புகளை நடத்துகிறார். வார்டில் எது என்றாலும் முன்னால் வந்து நிற்பார் என்று வார்டு மக்கள் புகழ்கிறார்கள். இப்போது பள்ளிப் பிள்ளைகளின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
"வெல்டன் மேடம்.. பாராட்டுக்கள்"!
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}