விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்று...சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Jan 09, 2026,11:11 AM IST

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


நடிகர் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் 'ஜனநாயகன்' படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் டிக்கெட்களும் புக்கிங் ஓபனான சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன. தணிக்கை வாரியம் (Censor Board) சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, படக்குழுவினர் தணிக்கை சான்றிதழ் கோரி நீதிமன்றத்தை நாடினர்.


இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய விளக்கத்தை அளித்தார். அதில், "ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்யப் புதிய குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழு படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" என வாதிடப்பட்டது. ஆனால் தணிக்கை குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்த பிறகு ஒருவருக்காக படத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என தெரிவித்தது.





இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று (ஜனவரி 9, 2026) வழங்குவதாக அறிவித்திருந்தனர். படத்தின் ஃபர்ஸ் டே ஃபர்ஸ்ட் ஷோ நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த நிலையில், அந்த காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு பணம் வாபஸ் தரப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் பட வழக்கு விசாரைணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவையும் அவர் ரத்து செய்துள்ளார். படத்தை மறு ஆய்விற்கு அனுப்ப வேண்டும் என்ற தணிக்கை வாரியத்தின் கருத்து ஏற்புடையது அல்ல என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்