சென்னை : விஜய் நடத்துள்ள லியோ படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் தயாரிப்பு நிறுவனத்திற்கு சில முக்கிய விஷயங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுக்க திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் சில இடங்களில் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. ஆனால் தமிழகத்தில் முதல் காட்சியை காலை 9 மணிக்கே திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்தும், லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்கக் கோரியும் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரைணக்கு ஏற்ற சென்னை ஐகோர்ட், இன்று (அக்டோர் 17) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் வழக்காக லியோ வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், லியோ படத்தை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு படத்தை திரையிட கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து நாளை பிற்பகலுக்குள் உத்தரவு பிறப்பிக்கும் படி தமிழக அரசுக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனால் லியோ படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் எத்தனை மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் திக் திக் என உணர்விலேயே இருந்து வருகிறார்கள். தற்போது லியோ படத்தின் முதல் காட்சி எப்போது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக அரசின் வசமே மீண்டும் சென்றுள்ளது
என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
காற்று
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
{{comments.comment}}