சென்னை: காற்று சுழற்சியால் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மிதமான காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளிலும் நீர் இருப்பில் மிகப்பெரிய மாற்றம் இல்லை. ஆனால் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் மற்றும் அணிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நாளை மறுநாள் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழை வரை செய்யக் கூடும் என்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு:
120 மொத்த கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரம் படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9269 கன அடியில் இருந்து தற்போது 8,355 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 108.32 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம் ,தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய ஏரிகளில் உள்ள நீர் இருப்பு குறித்த விவரத்தைப் பார்ப்போம்.
பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய 6 நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 13.21 டிஎம்சி ஆகும். ஒரு சில ஏரிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்தும், ஒரு சில ஏரிகளில் சற்று குறைந்தும் நீர் இருப்பு உள்ளது.
பூண்டி நீர்த்தேக்கம்:
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 22.47 அடி (511 மில்லியன் கன அடி)
செங்குன்றம்
மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 16.79 அடி (2367 மில்லியன் கன அடி)
சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 2.38 அடி (115 மில்லியன் கன அடி)
செம்பரம்பாக்கம்
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 17.61 (2050 மில்லியன் கன அடி)
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை:
மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 30.41 அடி ( 306 மில்லியன் கன அடி)
வீராணம்:
மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 13.30 அடி ( 914 மில்லியன் கன அடி)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}