சென்னையில் வசித்து வரும் பேராசிரியை மஞ்சரி பெரியார் வழியில் நடை போட்டு இன்று பலருக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
மஞ்சரியின் வெற்றிக் கதையை அவரது வாயாலேயே கேட்போமா...
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள முசுகுந்தபுரம் என்ற முசிறி என்ற ஊரில் முத்துப்பரிமணம் - சகுந்தலா தம்பதிகளின் முதல் புதல்வி நான். நான் பிறந்த சமயம் மஞ்சரி என்ற நூல் படித்துக் கொண்டு என் தந்தை இருந்ததால் எனக்கு பூங்கொத்து என அர்த்தம் கொண்ட மஞ்சரி என்ற பெயரை சூட்டினார். என் தந்தை தலைமையாசிரராக சிட்டிலரை என்ற கிராமத்தில் பணிபுரிந்தார். என் தாயார் இல்லத்தரசி ஆவர்.
“அடுப்பு ஊதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு” என்ற காலத்தில் பெரியார் வழிகொண்ட என் தந்தை என்னை தன் குடும்பத்தை மீறி படிக்க வைத்தார். காரணம் 1952-ல் என் தந்தை என் அம்மாவை சுயமரியாதை திருமணம் செய்தார்.
என் கனவு :
நான் படித்து பட்டதாரியாக வந்து பட்டம் வாங்கும் உடை அணிந்து போட்டோ எடுக்க வேண்டும். என்பதே என் கனவு ஆனால் விதி என்னை PUC பிறகு B.Sc ஒரு வருடம் படித்து முடித்த பின் திருமணம் நடந்து விட்டது. ஒரு EB பொறியாளருடன். மறுபடி கனவு காண ஆரம்பித்தேன். கணவரிடம் என் ஆவல் கூறி B.A & M.A POLITICAL SCIENCE படித்து முடித்தேன். ஆனால் பட்டம் நேரில் போய் வாங்க முடியவில்லை. சில குடும்ப சூழ்நிலைகளால் முதல் முறை என் கனவு பொய்த்தது.
தையில் கலையை முடித்து ஸ்ரீரங்கத்தில் T.T.C முடித்து முதல் வகுப்பு தேர்வு பெற்றேன். இக்கலையை என் மாணவிகள் ஒரு 10 பேருக்கு பயிற்றுவித்து அவர்களும் T.T.C முடிக்க வைத்தேன். இது இல்லாமல் என் வாழ்நாளில் 55-வது வயது வரை தையல் வகுப்பு நடத்தி சுமார் 500 பேருக்கு பயிற்றுவித்தேன். இதிலும் என் கனவு பலிக்கவில்லை.
என்னை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட கணவர் எம் சொக்கலிங்கம் BE என் படிப்பு ஆர்வம் கண்டு பெரியார் தத்துவங்கள் என்ற diploma-வில் சேர்த்து விட்டார். முதல் பட்டயம் வாங்கிய முதல் பெண்மணி நான் என்பதில் பெருமை கொள்கிறேன். இங்கும் என் கனவு ஈடேறவில்லை.
என் பெண் குழந்தைகள் மூவரையும் பட்டப்படிப்பு B.Tech படிக்க வைத்து அண்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அவர்கள் பட்டம் பெற்று உடையுடன் வந்து நின்றபோது என் கனவு மகள்கள் மூலம் நிறைவேறியது. இதற்காக நான் பல தடைகள் தாண்டி சாதித்தேன். உடலாலும்,பொருளாதாரத்திலும். என் கணவர் நேர்மையானவர் இதிலேயே புரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியார் சொன்னார் ஒரு குடும்பத்தில் பெண் படித்திருந்தால் குடும்பத்தையே படிக்க வைத்து மேலே வந்துவிடுவார்கள். இக்கருத்து என் குடும்பத்தில் பலிதமானது. என் பெண்கள் மட்டுமின்றி பேரக் குழந்தைகளும் விஞ்ஞானம், நடனம் போன்ற பல வெற்றிகளைக் கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என் பேத்தி ஓவியா பரதநாட்டிய கலையில் தேர்ந்து, போன வருடம் வீரமங்கை நாச்சியார் என்ற காவியத்தை நடன கலையில் காட்டி சிறப்பித்தாள் இன்று அது YOUTUBE-ல் வந்து கொண்டு இருக்கிறது. நான் சிறு வயது முதல் கல்லூரி முடியும் வரை நடனத்தில் சிறப்பாக செய்து என் ஆசிரியர்களிடம் அருளாசி பெற்றுள்ளேன். இதுவும் என் வாழ்வில் ஒரு தடம். இதுவே என் பேத்தி வழியாக என் கனவு நிறைவேறியது.
திருமணம் பேரக்குழந்தைகள் என என் கடமைகள் முடிந்த பின் உடற்பயிற்சி கற்பதற்காக அருள் தந்தை வேதாத்திரி மகரிஷின் அமைப்பான் SKY அமைப்பின் இணைந்து அருள்நிதி என்ற ஆசிரியர் பட்டம் வாங்கினேன். பின் SPORTS UNIVERSITY-ல் 1YEAR DIPLOMA IN HUMAN EXCENCIVE பட்டம் வாங்கினேன். இப்போதும் நேரடி பட்டம் வாங்கும் என் கனவு மெய்ப்பிக்கப்படவில்லை.
ஆழியாரில் உள்ள VISION அமைப்பில் அட்வான்ஸ் டிப்ளமோ 2வருடம் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ள இயலவில்லை கரணம் நான் அப்போ USA சென்றுவிட்டேன் இப்பொழுதும் பலிக்கவில்லை.
அதன் பின்னர் யோகா FOR THERAPHY IN பிகார் INSTUTE-ல் ஒரு வருடம் படித்து பட்டம் பெற்றேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1YEAR YOGA FOR THERAPHY படித்து முதல் வகுப்பில் தேர்வு பெற்றேன். பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ள இயலவில்லை கரணம் நான் அப்போ USA சென்றுவிட்டேன். என் கனவு ஈடேறவில்லை.
இச்சமயத்தில் எங்கள் குரோம்பேட்டை நியூ காலனி உமையான்புரம் மனவளக்கலை அறிவுதிருக்கோயில் மூலம் பட்டமளிப்பு விழா நடந்தபோது என் கனவை எங்கள் நிர்வாக அறங்காவலரிடம் கூறிய போது உங்கள் பட்டத்தை கொணர்ந்து நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள் என அனுமதி தந்தார் . எங்கள் அறக்கட்டளை முப்பெரும் விழா நடந்தபோது என் கனவு மஞ்சள் கலர் பட்டதாரி உடை அணிந்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் கையில் வாங்கிய போட்டோ எடுத்தேன். எங்கள் வீட்டு ஹாலில் வைத்துள்ளேன். இரண்டாம் முறை ஒரு விழாவில் SPORTS DIPLOMA violet கலர் உடை பூண்டு போட்டோ எடுத்தேன். 2 போட்டோவின் மூலம் என் கனவு மெய்ப்பித்தாகியது.
எங்கள் அறக்கட்டளையில் தொண்டு செய்து 1.Assistant professor training 2.Assistant professor,3.Professor training 4.Professor என உயர்ந்து இறுதியில் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் அன்று ஆழியாரில் முதல் ஞான ஆசிரியர் விருது பெற்றேன். என் வாழ்வின் பல தடைகள் மீறி இச்சாதனை பெற்றதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். படிப்பில் தந்தையும் ஒழுக்கத்தில் என தாயும் தந்த ஊக்குவிப்பே நான் இந்நிலை உயர்வதற்கு முக்கிய காரணம் .
“எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான்
மண்ணிற்பிறக்கையிலே
அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே” இப்பாடல் வரிகள் என் வாழ்வில் கண்டேன்.
என் பெண்கள் படிப்பில் உயரும் போதெல்லாம் நானும் படித்து உயர்ந்து வந்து கொண்டிருந்தேன். என கணவரின் அரவணைப்போடு வெற்றி பெற்றேன். இன்றும் நான் SKY-ல் தொண்டு புரிந்து வருகிறேன். என் கணவர் துணையோடு அவரது கிராமமான கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் படிப்பு வசதி இல்லாத மாணவர்களை எங்கள் வீட்டில் தங்க வைத்து பட்டதாரிகள் மற்றும் வேலையும் வாங்கித் தந்து சிலருக்கு திருமணமும் நடத்தி வைத்துள்ளோம்.
பிள்ளைகள் பிறந்த தினம், பேரன்,பேத்திகள் பிறந்த தினம் போன்றவற்றிற்கு தவறாது மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் இல்லம் தினம் அமுது படைக்கும் வள்ளலார் மடத்திற்கு பணம் செலுத்தி அன்னதானத்திற்கு இன்றளவும் எங்களால் ஆன உதவி செய்து வருகிறோம்.
தற்போது என் வயது 72, என் கணவர் வயது 83 கடந்த இரண்டு வருடம் கால் வலியால் அவதியுற பொது மகரிஷி அளித்த பயிற்சியே என்னை இன்று வரை காத்து வருகிறது.
தற்சமயம் என் வலி மறக்க என் தோழி பர்வதம் அம்மாள் மூலம் வள்ளலார் அகவல் எழுதத் தொடங்கினேன். வலியும் மறந்தேன் கடந்த இரண்டு முறை என் தோழி ஜீவா நந்தினி வீட்டில் அகவல் பாராயணம் பாடிய அனுபவத்தால் கடந்த மாதம் செப்டம்பரில் எழுதி காண்பித்தும் பாராயணம் செய்து தீபம் அறக்கட்டளை வேளச்சேரி வள்ளல் ராமலிங்க அடிகளார் மன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி சான்றுதழும்,மெடலும் பெற்றேன். இதுவும் என் வாழ்வில் ஒரு சாதனையே.
அதேபோல திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் தளிர்கள் அமைப்பில் நடைபெற்ற முப்பெரும் தேவி பாடல், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், சகலகலா வள்ளி மாலை கடந்த 30-ஆம் தேதி எழுதி,பாடி சான்றிதழ் பெற்றேன். அடுத்து தூய தமிழ் சொற்கள் குழுவில் இணைந்து 4-ஆம், 5-ஆம் வாரம் சான்றிதழ்கள் பெற்றேன்.
குரு வாழ்க குருவே துணை. எண்ணம் விதைத்தால் அது என்றோ ஒரு நாள் பலித்தமாகும் என்பது என் வாழ்க்கையில் இன்று நிறைவேறியது. பாரதியார் வாக்கின்படி, நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்னை நல்ல வீணையாக பரிமளிக்க வைத்ததில் பெரும் பங்கு என் கணவரையும்,தந்தையுமே சேரும்.
மகாரிஷி கூற்றுப்படி நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும்,மனதுக்கும் துன்பம் தர மாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். அன்பும்,கருணையும் கொண்டவளாய் வாழும் வரை தொண்டாற்றி மகிழ்வேன்.
ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பிரஸ்மீட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை.. கிளம்பிய சர்ச்சை!
என்னாது நோபல் அமைதிப் பரிசு லீக் ஆய்ருச்சா.. சூதாட்டக் கும்பல் அட்டகாசம்.. அதிர்ச்சியில் நார்வே
அனல் பறக்கும் மாதம்பட்டி விவகாரம்.. பாலைவன பூமியில் ஓய்வெடுக்கும் மனைவி ஸ்ருதி
பேசாம ஹனிமூனையும் கூட நீங்களே முடிவு செஞ்சு சொல்லிடுங்களேன்.. திரிஷா நச் பதிலடி!
அக்.,17ல் கரூர் செல்லும் விஜய்?... கல்யாண மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க திட்டம்!
ஐயா அப்பத்தாவே ஆணிவேர் !
பெரியார் வழியைக் காட்டிய தந்தை.. அடுத்தடுத்து படித்து.. அசர வைக்கும் பேராசிரியை மஞ்சரி!
அம்மாவுக்குள் இருந்த ஏக்கம்.. அவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக மேடையில் கலக்கும் தன்யா!
பெண்கள் படிக்கணும்.. கத்துக்கிட்டே இருக்கணும்.. உதாரண நாயகியாக திகழும் டாக்டர் உஷா தண்டாயுதபாணி!
{{comments.comment}}