சென்னை வாசிகளே கவனம்: "மிச்சாங்" புயலால்.. டிச. 4.. சென்னைக்கு .. மிக கனமழை எச்சரிக்கை!

Nov 30, 2023,04:05 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் உருவாகவுள்ள மிச்சாங் புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீவிரமடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 3ம் தேதி புயலாக உருவாகும். இந்தப் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல்  டிசம்பர் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை:


டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை ,ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக  கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


டெல்டாவுக்கு கன மழை


டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் டெல்டா மாவட்டங்களான கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ,ஆகிய மாவட்டங்களில்  கனமழையை எதிர்பார்க்கலாம்.


கனமழை காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலர் 14 கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பு கருதி கடிதம் அனுப்பி உள்ளார். இக்கடிதத்தில் அவர் புயல் குறித்தும் ,மழை நீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த  அறிவுறுத்தியுள்ளார். 


மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்யவும், 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .


தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு


இந்நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலர் உத்தரவின்படி,மக்களின் பாதுகாப்பு கருதி மீட்பு படையினர் நாகை மாவட்டத்திற்கு விரைந்தனர். மேலும் 27 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர் மூழ்கி பம்புகள் ,உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்