டில்லி : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்ட பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் 65 சதவீதம் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்த தொகையில் எவ்வளவு தொகை வழங்கபட உள்ளதாகவும், இனி இது மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் 2020ம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர் மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவை அமைக்கும் பணிகள் சென்னையில் 45 க்கும் அதிகமான இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மொத்தமாக ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7500 கோடி. இதனை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் மத்திய அரசு சார்பில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் இன்று (அக்டோபர் 05) சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்க உள்ள நிதி குறித்து மத்திய அரசு சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ரூ.63,246 கோடி மதிப்பீட்டு செலவில் மத்திய துறை திட்டமாக சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் நடத்தப்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்காக மத்திய அரசு 65 சதவீதம் தொகையை வழங்கும். இதுவரை 90 சதவீதம் அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசின் திட்டமானதால் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனாக ரூ.7425 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும். சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதியை வழங்கும் என்றார். மத்திய நிதியமைச்சரின் இந்த விளக்காத்தால் சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகள் இனி மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது தெளிவாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}