சென்னை : சென்னைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மிச்சாங் (மிக்ஜாம்) புயல், அதிதீவிர புயலாக ஆந்திரா அருகில் டிசம்பர் 05ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று நாட்களுக்கு யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை போலீசார் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கு 200 மில்லி மீட்டர் அளவுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என்று அர்த்தம்.
சென்னை போலீசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று பிற்பகல் முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், புயல் கரையை கடந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை அடுத்த 3 நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மழைநீரில் வாகனங்களை இயக்க வேண்டாம். அதிக மழை பெய்யும் சமயங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம்.

மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் கிரேன் போன்ற இயந்திரங்களை பத்திரமாக நிறுத்தி வைக்க வேண்டும். வெல்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை காரணமாக பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து மேலும் 100 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. படகுகள் போன்ற மீட்பு, பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Michaung புயல் எதிரொலி... சென்னை, ஆந்திரா வரும் 54 ரயில்கள் ரத்து
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}