சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இதுவரை 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி திருவேங்கடம் என்பவரை மதுரவாயல் அருகே வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்தப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் ஒரு பகுதியை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் இருப்பதாகவும் போலீஸார் விளக்கியுள்ளனர். வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்டவற்றையும் காவல்துறை தெளிவாக வெளியிட்டுள்ளது. அனைவருமே வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொலையாளிகளாக கருதப்படுவோர் திட்டமிட்டு ஆமஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து மின்னல் வேகத்தில் வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. கொலையாளிகள் பலரும் சொமாட்டோ யூனிபார்ம் போட்டுள்ளனர். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து விட்டு, அவர் தப்பி விடாத வகையில் மடக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}