சென்னை : சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி ஆரஞ்சு அலர்ட்டும், அக்டோபர் 16ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுத்து இந்திய வானகலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர 25 மாவடட்டங்களில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் பகலில் மேகமூட்டமாகவும், இரவில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் முதலில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சொல்லப்பட்டது.

இன்று பிற்பகல் வெளியிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில், ராமநாபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும், அதாவது அக்டோபர் 19ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது. அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் தான் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீரவிமாக செய்து வருகிறது. அவசர எண்கள் உள்ளிட்ட எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு 9 மணியளவில் தமிழ்நாடு வெதர்மேன் மழை தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று இரவு துவங்கி, நாளை காலை வரை சென்னையில் மிக கனமழை கொட்டி தீர்க்கும். கடலூர், புதுச்சேரியில் இருந்து மழை மேகங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. உள்ளே வந்த பிறகு சின்ராசை பிடிக்க முடியாது. இரவு முழுவதும் பெய்யும் மழையை கொண்டாடி அனுபவியுங்கள்.
கோவையில் வழக்கம் போல் மாலை முதல் மழை பெய்து வருகிறது. கோவைக்கு இது மழை மாதம். மதுரை, சிவகங்கை பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}