மனித நேயம் எங்கே.. இதோ இங்கே!

Oct 03, 2023,05:07 PM IST

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் படுத்துக் கிடந்த ஷம்பு என்பவரை மீட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை கொடுத்து பாதுகாப்பாக பராமரித்து வரும் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.


சென்னை அரசினர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை டாக்டர்கள் செய்த இந்த செயலானது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இவர்களின் செயலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியமும் பாராட்டியுள்ளார்.


சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரம் கிடந்தார். தகவவலறிந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு அவருக்குரிய பாதுகாப்பும் தேவையான சிகிச்சையும் அளித்தனர். எந்திரிக்கூட முடியாத நிலையில் இருந்த அவரை தூக்கி உட்கார வைத்தனர். படுத்துகிடந்த அவரின் உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் அவரை கொண்டு சென்றனர். 


அவரது காயங்களையும் உடலையும் நன்றாக துடைத்து பின்னர் வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். தற்போது ஷம்பு நலமாக உள்ளர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.


மருத்துவர்களின் சேவை மகத்தானது என்பதனையும் அவர்களின் மனிதநேயம் மெச்சத்தக்கது என்பதையும் இதன் மூலம் அறியலாம்.  இன்னும் மனிதமும் மனித நேயமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் எனலாம். இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவருக்கு உதவிய டாக்டர்களையும் வாழ்த்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்