லக்னோ: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், இன்று நடைபெற்ற 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்துக்குப் போய் விட்டது சென்னை.
சென்னை அணி அடுத்து வரும் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுடனான போட்டியில் கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டும். அப்போதுதான் பிளே ஆப் சுற்று குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்குப் போய் விட்டது.
முன்னதாக தனது பேட்டிங்கின்போது, தொடக்கத்தில் நல்ல விறுவிறுப்புடன் ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்து ருத்துராஜ், சாம்சன் உள்ளிட்ட 3 விக்கெட்களை இழந்து அதிர்ச்சியைச் சந்தித்தது. இறுதியில் சற்று சுதாரித்து ஆடி 187 ரன்களை எடுத்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்பதை லக்னோவின் சேசிங் நிரூபித்து விட்டது.
லக்னோவின் ஏகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் முதலில் ரிஷாப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. லக்னோ அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். லக்னோ அணியின் ஆகாஷ் சிங் அபாரமாக பந்துவீசி சென்னை அணியின் டாப் ஆர்டரை சரித்தார். கடைசி நேரத்தில் சிவம் துபே சற்று சிறப்பாக ஆடிய ஸ்கோர் கெளரவமான நிலையை எட்ட உதவினார். அதேபோல கார்த்திக் சர்மா சிறப்பாக ஆடி அரை சதம் போட்டு உதவினார்.
ஆனால் சேசிங்கில் லக்னோ அணி மிரட்டி விட்டது. தொடக்க ஆட்டக்காரரான இங்கிலிஸ் மற்றும் மிட்சல் மார்ஷ் அதிரிபுதிரியாக ஆடி ரன்களைக் குவித்தனர். மார்ஷ் 90 ரன்களைக் குவித்தார். இந்த ஜோடியைப் பிரிக்கவே முடியாத நிலைக்குப் போய் விட்டது சென்னை. பந்து வீச்சில் சென்னை அணி மிகவும் சொதப்பதலாக செயல்பட்டு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது

இறுதியில், 16.4 ஓவர்களிலேயே தனது வெற்றிக்குத் தேவையான 188 ரன்களை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெற்று விட்டது லக்னோ அணி. இந்தத் தோல்வி சென்னை அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.
தற்போதைய புள்ளிப்பட்டியலில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 6வது இடத்துக்குப் போய் விட்டது.
மீதமுள்ள 2 போட்டிகளையும் சென்னை அணி வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு கலை ரத்னா விருது
நிழல் தேடும் மரங்கள்
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
அப்பா கண்ணாடி!
My Mom .. என் அம்மா!
Vaiko gets angry: ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?
அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}