ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

Jun 30, 2026,03:04 PM IST

சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய கூட்டணிக் கணக்குகளுக்கு மத்தியிலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்வியால் கடுமையான கொதிப்படைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க ஆட்சியில் ஊழல், கட்டிங், கலெக்ஷன்!

செய்தியாளர்களைச் சந்தித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) பொதுச்செயலாளர் வைகோ, எதிர்கட்சியான தி.மு.க மீது மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தி.மு.க ஆட்சியில் கரப்ஷன் (Corruption), கட்டிங் (Cutting) மற்றும் கலெக்ஷன் (Collection) எனப் பரவலாக லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்து இருந்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் ஆதிக்கம் செலுத்தி வந்ததாக அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.


செய்தியாளர் கேள்வியால் வைகோ கொதிப்பு :




வைகோவின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் அவரிடம் குறுக்குக் கேள்வி ஒன்றை எழுப்பினார். "தி.மு.க-வுடன் கூட்டணியில் நீடித்திருந்த போது, இந்த ஊழல்கள் எதுவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?" என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் நிலைதடுமாறிய வைகோ, கடுமையான கோபத்திற்கு உள்ளானார். செய்தியாளரை நோக்கி ஆவேசமாக விரலை நீட்டி, நீங்கள் எந்த பத்திரிக்கை? உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என காட்டமாக பதிலளித்தார். கூட்டணியில் இருந்த காலத்தைக் குறிப்பிட்டு எழுப்பப்பட்ட இந்த ஒற்றைக் கேள்வி, அவரை கடும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


அரசியல் பின்னணி மற்றும் முக்கியத்துவம்

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க அங்கம் வகித்து வந்த நிலையில், சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய கையோடு, ஆளும் கட்சியான தவெக.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருந்தார் வைகோ. ஆனால் அவரது கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்களும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததுடன், திமுக., உடனேயே இருக்க உள்ளதாக கூறி விட்டனர். இருந்தாலும் தவெக அரசுக்கு உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் மதிமுக ஆதரவு அளிக்கும் என வைகோ அறிவித்தார். 


திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த 2 நாட்களிலேயே திமுக பற்றி ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர் முன் வைத்துள்ளார். இத பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வைகோ கொந்தளித்தது, சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

news

அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

news

ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

news

வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?

news

காற்றே உன் பெயரைக் கேட்டேன்

news

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

news

அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?

news

அதிமுக.,வில் மீண்டும் பரபரப்பு: இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்க வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் முடிவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்