சென்னை: டெல்லி கேபிடல்ஸ் அணியின் அசத்தலான பவுலிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
சுத்தமாக இன்றைய போட்டியில் பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, சென்னை அணி பார்மிலேயே இல்லை. பவுலர்களாவது ஒரு கட்டத்தில் சுதாரித்து அதிரடி காட்டினார்கள். ஆனால் பேட்ஸ்மென்கள் சுத்தமாக சொதப்பி விட்டனர். ஒரு வீரரிடமும் போர்க்குணத்தைப் பார்க்க முடியவில்லை. இதனால் மீண்டும் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது சென்னை.
184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக இருந்தது. ரச்சின் ரவீந்திரா 3 ரன்களில் விழ, டேவன் கான்வே 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த சிவம் துபே நம்பிக்கை அளித்து பின்னர் ஏமாற்றினார். ஜடேஜாவும் 2 ரன்களில் அவுட்டானார்.
இன்றைய ஆட்டத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் விஜய் சங்கர்தான். சிங்கிள்ஸாக எடுத்து ரசிகர்களை ரொம்பவே சோதித்து விட்டார். அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்காமல் கடைசி நேரத்தில் அவர் அடித்த பவுண்டரி, சிக்ஸர்களுக்கு ரசிகர்களிடையே பெரிய அளிவில் வரவேற்பு இல்லை. அவர் எடுத்த 68 ரன்களில் ஒரு சிக்ஸரும், 5 பவுண்டரிகளுமே வந்தன என்பது சோகத்துக்குரியது.
தோனி வழக்கம் போல தனது பங்களிப்பை செய்தார். 26 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார் தோனி. அதற்கு மேல் அவரிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது. நடப்புத் தொடரில் சென்னை அணி சந்தித்துள்ள தொடர்ச்சியான 3வது தோல்வி இது. இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அட்டகாசமான பிளானோடு விளையாடியது. அந்த அணிக்குக் கிடைத்துள்ள தொடர்ச்சியான 3வது வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்ஸார் படேல் கேப்டனாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
முன்னதாiக டெல்லி அணி சார்பில் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி 77 ரன்களைக் குவித்தார். அதேபோல அபிஷேக் போரல் அதி வேகம் காட்டி 33 ரன்களைச் சேர்த்தார். அக்ஸார் படேல் 21, சமீர் ரிஸ்வி 20, திரிஷன் ஸ்டப்ஸ் 24 என ரன்களைக் குவித்தனர். சென்னை பந்து வீச்சாளர்கலில், கலீல் அகமது 2 விக்கெட்களைச் சாய்த்தார். நூர், ஜடேஜா மற்றும் பதீரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
இன்றைய போட்டியைக் காண தோனியின் பெற்றோர், மனைவி, குழந்தை என மொத்தக் குடும்பமும் வந்திருந்தது. ஐபிஎல் போட்டிக்கு தோனி பெற்றோர் வந்ததே கிடையாது. முதல் முறையாக வந்திருந்தனர். ஆனால் அவர்கள் வந்த முதல் போட்டியே தோல்வியில் முடிந்து விட்டது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}