சென்னை டூ மதுரை ரயில்கள் இன்று ரத்தாக வாய்ப்பில்லை.. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஹேப்பி நியூஸ்!

Dec 02, 2024,04:15 PM IST

மதுரை:   ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழை காரணமாக ரயில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விரைவில் சரியாகி விடும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் சு. வெங்கடேசன் கூறியுள்ளதாவது:


காலையிலிருந்து ரயில் பயணிகள் மற்றும் பயணிகளின் உறவினர்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பயணிகளிடனும் இன்னொரு புறம் தெற்கு இரயில்வேயின் தலைமையகத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறேன்.


யாரும் பதட்டமடைய வேண்டாம். ரயில்வே நிர்வாகம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து நிலமையை திறம்பட கையாண்டு வருகின்றனர். என்பதை பயணிகளுக்கு தெரிவித்தபடி உள்ளேன். ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த நிலைமையை கீழே பதிவிட்டுள்ளேன்.




கீழே உள்ள இரயில்கள் தவிர தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த  பிற ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன. விரைவில் அவைகள் அனைத்தும் நிறைவிடத்துக்கு வந்து சேரும்.


சென்னை விழுப்புரம் இடையே உள்ள முக்கிய வழித்தடம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனர். எனவே இன்று இரவு சென்னையிலிருந்து புறப்படும் இரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளனர்.


நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு வண்டி இப்பொழுது வாலாஜா ரோடு கடந்துள்ளது. காலை உணவு திருக்கோயிலூர் மக்கள் தந்தனர். காட்பாடியில் அவரவர் வாங்கிக் கொண்டனர்  என்று இரயில் பயணிகள் தெரிவித்தனர்.


ஒரு புறம் நிலமையை திறம்பட கையாளப் பெருக்கெடுத்தோடும் நீருக்கு நடுவே நின்று தண்டவாளங்களை சரி செய்து கொண்டிருக்கும் இரயில்வே ஊழியர்கள். மற்றும் விழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் இரயில்வே அலுவலர்கள்.  மறுபுறம், எங்கெங்கோ சென்றபடி நகரும் ரயிலுக்குள் நிலமையை சமாளித்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகள். இரு முனைகளின் குரல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். பெரும் புயலும், பேரிடரும் சந்தித்து மீளும் வலிமையே மனிதத்தின் தனித்துவம்.


இரயில்வே நிர்வாக தகவல்கள்;


சென்னை பிரிவு;


17653 கச்சேகுடா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.

17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி சர்கார் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது. 

560 உணவுப் பொட்டலங்களும் 700 தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


திருச்சி பிரிவு;


போக்குவரத்து ஏற்பாடுகள்: மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 2700க்கும் மேற்பட்ட பயணிகளை சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல மொத்தம் 27 பிரத்யேக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. 


உணவு மற்றும் நீர் விநியோகம்: பாதிக்கப்பட்ட ரயில்களில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும் போது அவர்களின் வசதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. (3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன) பாதுகாப்பான போக்குவரத்து: பேருந்துகள் பயணிகளை பாதுகாப்பாக சென்னையில் அவர்கள் சேருமிடத்திற்கு ஏற்றிச் சென்றன.


இவை தவிர


1. மாம்பழப்பட்டில் (MMP) - 16 பேருந்துகள், 1500 பயணிகள் 2. வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 5 பேருந்துகள், 600 பயணிகள் 3. விழுப்புரம் ஜன. (VM) - 5 பேருந்துகள், 600 பயணிகள் உணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன: 1. மாம்பழப்பட்டில் (MMP) - 450 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 2. வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 450 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 3. விழுப்புரம் ஜன. (VM)- 2000 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 4. திருவண்ணாமலையில் (TNM) - 100 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டுள்ளன.


கீழே உள்ள ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன


1. பண்ருட்டி நிலையத்தில் ரயில் எண். 20606 (TCN-MS). 

2. ரயில் எண். 17408 (MQ-TPTY) திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் 

3. ரயில் எண். 12694 (TN-MS), ரயில் எண். 22662 (RMM-MS), 16752 (RMM-MS) விழுப்புரம் ஜே.என். 

4. வெங்கடேசபுரத்தில் ரயில் எண். 20636 (QLN-MS)

5. மாம்பழப்பட்டில் ரயில் எண். 12662 (SCT-MS), 12638 (MDU-MS)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?

news

கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

அதிகம் பார்க்கும் செய்திகள்