பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. நாளை சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. ரயில் சேவை ரத்து!

Feb 20, 2024,07:28 PM IST

சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை டூ நெல்லை மற்றும் நெல்லை டூ சென்னை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை முக்கியமான ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த ரயிலின் அமைப்பு, சுத்தம், கூடுதல் வேகம் என பல சிறப்புகளை உள்ளடக்கிய வந்தே பாரத் ரயில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது.




இந்நிலையில் தற்போது ஈச்சங்காடு மற்றும் மாத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.


நெல்லை டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை என்ற இரு மாக்கத்திலும் வந்தே பாரத் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் உட்பட ஆறு ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


இது தவிர தேஜஸ் விரைவு ரயில் வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒரு நாள் மட்டும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்