சென்னை டூ நெல்லை.. இதுதாங்க வந்தே பாரத் டிக்கெட் கட்டண விவரம்!

Sep 22, 2023,03:32 PM IST

சென்னை: சென்னை டூ நெல்லை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் கட்டணத்தை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.  செப்டம்பர் 24ம் தேதி இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் கட்டணங்கள்  2 வகையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


திருநெல்வேலி  டூ சென்னை  இடையே இயங்கவுள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகராக வியாழக்கிழமை முடிந்துள்ளது. சோதனை ஓட்டம் குறித்த நேரத்தில் முடிந்துள்ளதால் ரயில்வே பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




இந்த நிலையில் இந்த ரயிலின் டிக்கெட் கட்டண விவரம் வெளியாகியுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3025 எனவும். சாதாரண கட்டணம் ரூ.1620 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


திருநெல்வேலி டூ சென்னை இடையே இயக்க உள்ள வந்தே பாரத் விரைவு சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தெடங்கி வைக்க உள்ளார்.  ஏற்கனவே தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளன. தற்போது இயங்கவுள்ளது 3வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.


இது குறித்து தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் முகுந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநெல்வேலி-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். சென்னை-திருநெல்வேலி இடையிலான 650 கி.மீ. தொலைவை 7.50 மணி நேரத்தில் கடக்கும். இன்னும், இந்த ரயிலின் வேகத்தை 130 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இந்த ரயிலில் 52 பேர் வரை பயணிக்கக்கூடிய ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 பேர் பயணிக்கலாம். ரயில் என்ஜின் உள்ள பெட்டியிலும் 46 பேர் வரை பயணிக்க முடியும். தற்போதைய நிலையில் 540 பேர் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம்.


விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும், திங்கள்கழமை இருந்து தான் முறைப்படி இயக்கப்படுகிறது. ரயிலில் ஒலிப் பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவுப் பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள் , இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்றார்.


வாரத்தல் 6 நாட்கள் ரயில் இயக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படாது என ரயில்வே துறை வட்டாரங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்