இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்...வாகன ஓட்டிகளே இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

Jan 31, 2025,10:52 AM IST

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்னை வருவதை முன்னிட்டு இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


முன்னாள் குடியரசுத் தலைவர் தலைவரும் பாஜகவின் மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரனுக்கு மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.




இந்த நிலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு,இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக  மாமல்லபுரத்திற்கு செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 


அதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையை முன்னிட்டு சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


 மாண்புமிகு இந்திய துணை குடியரசு தலைவர் மற்றும் உள்துறை மத்திய உள்துறை அமைச்சர்  அவர்கள் 31.1. 2025 அன்று சென்னை வருவதை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும் தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு (ஈசிஆர்) செல்லும் வாகன ஓட்டிகள் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மாற்று பாதையாக பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ஈசிஆர் வரை உள்ள சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டுக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்