சென்னை: சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் புதிதாக ஒரு யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சைதாப்பேட்டை எம்சி ராஜா மருத்துவமனைக்கு எதிரே ஒரு புதிய யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை -நந்தனம் இடையே சோதனை ரீதியாக நவம்பர் 17ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு புதிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நந்தனம் சந்திப்பிலிருந்து தி.நகர் நோக்கி வரும் வாகனங்கள், சிஐடி நகர் முதல் மெயின் ரோடு மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து வலது பக்கம் திரும்பிச் சென்று கொண்டுள்ளன. இன்று முதல் அந்த வாகனங்கள் அப்படிச் செல்லாமல், வலது பக்கம் திரும்பாமல் நேராக 50 மீட்டர் சென்று, எம்சி ராஜா மருத்துவமனை எதிரே யு டர்ன் போட்டு திரும்பிச் செல்ல வேண்டும்.
அதேபோல தற்போது சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள், ஜோன்ஸ் சாலை சந்திப்பில் உள்ள தாதண்டர் நகர் பொதுப்பணித்துறை குடியிருப்பு நோக்கி வலது புறம் திரும்பிச் செல்கின்றன. அதற்குப் பதில், இனிமேல் மேலும் 50 மீட்டர் நேராக சென்று, யு டர்ன் போட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}